15-18 அக்டோபர் 2026
டொரோண்டோ, கனடா
உலகத் தமிழ் மாநாடு 2026 நிகழ்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பாகப் பணம் செலுத்துங்கள்.
பாதுகாப்பான கட்டணம்: உங்கள் விருப்பமான நுழைவுச் சீட்டைத் தேர்ந்தெடுத்து கட்டணப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 என்பது, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை ஒரே அறிவியல் மேடையில் இணைக்கும் உயரிய சர்வதேச மாநாடாகும்.
தமிழின் தொன்மை, செழுமை மற்றும் உலகளாவிய பங்களிப்பை எதிர்காலத் தேவைகளுடன் இணைக்கும் நோக்கில், இம்மாநாடு செம்மொழித் தமிழ், செயற்கை நுண்ணறிவு (AI), மொழித் தொழில்நுட்பம், தத்துவம், பண்பாடு மற்றும் பாரம்பரியம், புலம்பெயர் தமிழர் ஆய்வுகள், உலகமயமாக்கல், வரலாறு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் மற்றும் நிலைத்த வளர்ச்சி உள்ளிட்ட பல்துறை ஆய்வுகளுக்கான உலகளாவிய அறிவுப் பரிமாற்றத் தளமாக அமைகிறது.
உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பங்களிப்புடன் நடைபெறும் இம்மாநாடு, ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் கலந்துரையாடல்கள், புதுமையான சிந்தனைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் மூலம் தமிழின் அறிவியல், கல்வி மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கான புதிய பாதைகளை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. "தமிழின் பாரம்பரியத்தையும் எதிர்காலப் புதுமைகளையும் இணைத்து, உலக அறிவியல் சமூகத்திற்கான புதிய வாயில்களைத் திறப்போம்" என்பதே இம்மாநாட்டின் உயரிய நோக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு
செம்மொழித் தமிழ்
புலம்பெயர் தமிழர் ஆய்வுகள்
பண்பாடு மற்றும் பாரம்பரியம்
தத்துவம்
பொருளாதாரம்
வரலாறு
மொழிக் கொள்கைத்துவம்
செம்மொழித் தமிழின் பாரம்பரியத்தையும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழர்களின் அறிவு, ஆய்வு, புதுமை மற்றும் உலகளாவிய பங்களிப்பையும் இணைக்கும் சர்வதேச அறிவியல் மாநாடு
சென்டெனியல் கல்லூரி நிகழ்வு மையம், 937 ப்ராக்ரஸ் அவென்யூ, ஸ்கார்பரோ, ஒன்ராறியோ
சென்டெனியல் கல்லூரி நிகழ்வு மையம், 937 ப்ராக்ரஸ் அவென்யூ, ஸ்கார்பரோ, ஒன்ராறியோ
சென்டெனியல் கல்லூரி நிகழ்வு மையம், 937 ப்ராக்ரஸ் அவென்யூ, ஸ்கார்பரோ, ஒன்ராறியோ
மெட்ரோபாலிட்டன் சென்டர், 3840 பிஞ்ச் அவென்யூ, ஸ்கார்பரோ, ஒன்டாரியோ.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள, ஆய்வுக் கட்டுரை வழங்க, கூட்டாண்மை அமைக்க அல்லது தன்னார்வலராகப் பணியாற்ற உங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்யுங்கள்.