எங்கள் தொலைநோக்கு
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணியம், சமத்துவம், வாய்ப்பு மற்றும் கூட்டுமுன்னேற்றத்தை அனுபவிக்கும் எதிர்காலத்தை உருவாக்குதல்.
2026 உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஆராய்ச்சி, ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியம், சமூக மேம்பாட்டிற்கான உலகளாவிய தளமாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய முயற்சியில் எங்களுடன் கூட்டிணைய உலகம் முழுவதிலிருந்தும் அமைப்புகள், நிறுவனங்கள், வணிகங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களை அழைக்கிறோம். பகிரப்பட்ட மதிப்புகள், பரஸ்பர மரியாதை, எங்கள் தொலைநோக்கு, பணி மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளுடனான இணக்கத்தின் மீது எங்கள் கூட்டாண்மைகள் அமைந்துள்ளன.
எங்களுடன் இணையுங்கள்உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணியம், சமத்துவம், வாய்ப்பு மற்றும் கூட்டுமுன்னேற்றத்தை அனுபவிக்கும் எதிர்காலத்தை உருவாக்குதல்.
பண்பாட்டுப் பாதுகாப்பு, கல்விச் சிறப்பு, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்திக்கொண்டே உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைத்து வலுப்படுத்துதல்.
எங்கள் தொலைநோக்கு மற்றும் பணியுடன் நெருக்கமாக இணைந்து, மாநாட்டின் உலகளாவிய சென்றடைவு, நீண்டகாலத் தாக்கம் மற்றும் எதிர்கால முயற்சிகளை வடிவமைப்பதில் ஒத்துழைக்கும் அமைப்புகள்.
கல்வித் தலைமை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, வெளியீடுகள் மற்றும் அறிவுப் பகிர்வுக்கு பங்களிக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சிந்தனைக் குழுக்கள், அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள்.
பங்கேற்பை வலுப்படுத்தி, தமிழர் அடையாளம், பாரம்பரியம் மற்றும் சமூக ஈடுபாட்டைக் கொண்டாடும் அடிமட்ட அமைப்புகள், இலாப நோக்கற்ற குழுக்கள், பண்பாட்டுச் சங்கங்கள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் சமூக வலையமைப்புகள்.
நிபுணத்துவம், வலையமைப்பு வாய்ப்புகள் மற்றும் தொழில், மேம்பாடு, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் எதிர்கால நோக்குடைய ஒத்துழைப்பை வழங்கும் வணிகங்கள், தொழில்முனைவோர், தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் புத்தாக்க மைய அமைப்புகள்.
மாநாட்டின் அணுகல்தன்மை, வெளியீடுகள், நிகழ்ச்சித் திட்டங்கள், புலமைப்பரிசில்கள் மற்றும் சமூகச் சென்றடைவு முயற்சிகளை ஆதரிக்க நிதி அனுசரணைகள், மானியங்கள் அல்லது வளங்களை வழங்கும் அமைப்புகள், வணிகங்கள், கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
ஆய்வுக் கட்டுரைகள், முதன்மை உரைகள் மற்றும் நிபுணர் அமர்வுகளை வழங்குதல்
குழு விவாதங்கள், பயிலரங்குகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை இணைந்து நடத்துதல்
பண்பாட்டு, கல்வி மற்றும் இளைஞர் திட்டங்களை ஆதரித்தல்
உலகளாவிய பங்கேற்பை ஊக்குவித்து ஒருங்கிணைத்தல்
அனுசரணைகள், மானியங்கள், புலமைப்பரிசில்கள் அல்லது வளங்களை வழங்குதல்
தொழில்நுட்ப, கல்வி, ஊடக அல்லது அமைப்புசார் ஆதரவை வழங்குதல்
மாநாட்டுக்கு அப்பாற்பட்ட நீண்டகால ஒத்துழைப்பு முயற்சிகளை உருவாக்குதல்
எங்கள் தொலைநோக்கு, பணி மற்றும் கோட்பாடுகளைப் பகிரும் அமைப்புகள், தமிழ் அறிவு, பண்பாடு, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான இந்த உலகளாவிய இயக்கத்தில் இணைய அன்புடன் அழைக்கப்படுகின்றன.
அனைத்துக் கூட்டாண்மைகளும் ஒத்துழைப்புகளும் மாநாட்டு வழிநடத்தல் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டவை.
மின்னஞ்சல்: communication@tamilfederation.org
தொலைபேசி: 416-473-5348
இணையத்தளம்: உலகத் தமிழ் ஆய்வு மாநாடு
தமிழும் செய்யறிவும்
மெய்ப்பொருளியலும் பண்பாடும்
பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்
தமிழர் வரலாறும் வாழ்வியலும்
வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு
ஒன்றிணைந்து, வலிமையான மற்றும் மேலும் இணைக்கப்பட்ட உலகத் தமிழ் எதிர்காலத்தை உருவாக்குவோம்.