Thursday, April 30, 2026
செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு - 2026
செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் எனும் பெயரிலான ஓர் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026.10.15 ஆம் நாள் முதல் 2026.10.18 ஆம் நாள் வரை கனடா நாட்டில் தொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளது.
இம்மாநாடானது, உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப்பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, குமுக-பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமைகிறது.
மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
மாநாட்டின் ஆய்வு வகைப்பாடுகள்:
- தமிழும் செய்யறிவும்
- மெய்ப்பொருளியலும் பண்பாடும்
- பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்
- தமிழர் வரலாறும் வாழ்வியலும்
- வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு
ஆய்வுச் சுருக்கம் அளிக்கும் முறை:
- ஆய்வுச் சுருக்கம்: 250-300 சொற்களில் அமைதல் வேண்டும்
- தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் அமையலாம்
- தமிழ் மொழியாயின்: ஒருங்குறி (Unicode) 12 pt அளவிலும், ஆங்கில மொழியாயின்: Times New Roman 12 pt அளவிலும் அமைய வேண்டும்
- குறிச்சொற்கள் (Keywords) தரப்பட வேண்டும்
- அளிப்பதற்கான கடைசி நாள் 2026.06.10 ஆகும்
- அளிப்பதற்கான இணையதளம் www.GlobalTamilConference.org
மதிப்பாய்வுச் செயன்முறை:
அளிக்கப்படும் அனைத்துத் ஆய்வுச் சுருக்கங்களும் மாநாட்டு ஆய்வுக் குழுவினரால் விரிவாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களை எழுதியோர் ஆய்வுக் கட்டுரை எழுதுமாறு வேண்டப்படுவர்.
அனைத்து ஆய்வாளர்களுக்கும் அவரவர் ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றிய முடிவு 2026.06.30 ஆம் நாளுக்குள் அறிவிக்கப்படும்.
முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் 3000 சொற்களுக்கு மிகாமலும் ஒருங்குறி எழுத்துரு 12 அளவிலும் அமைதல் வேண்டும். இக்கட்டுரைகளை 2026.08.31 ஆம் நாளுக்கு முன் கிடைக்கக் கூடியதாக மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அனுப்ப வேண்டும்.
தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும் கனடாவில் தங்குமிட வசதிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு பற்றிய கூடுதல் விளக்கங்களை www.GlobalTamilConference.org என்னும் இணைய தளத்தில் காண்க.
மேற்படி ஐந்து வகைப்பாடுகளின் கீழான அமர்வுத் தலைப்புகள்:
1. தமிழும் செய்யறிவும்
- செய்யறிவு உலகில் தமிழ்
- செய்யறிவு உலகில் மொழிபெயர்ப்பு
- செய்யறிவு உலகில் படைப்பிலக்கியங்கள்
- செய்யறிவு உலகில் கலைச் சொல்லாக்கம்
2. மெய்ப்பொருளியலும் பண்பாடும்
- மெய்ப்பொருளியலும் தமிழர் எண்ணப்பாடுகளும்
- தமிழ்க்கலை மற்றும் அழகியல்
- தமிழ்க் குமுக விழுமியங்களும் பெண்ணியமும்
- புலம்பெயர் தமிழரது பண்பாட்டு மாற்றங்களும் அடையாளம் பேணலும்
3. பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்
- தமிழர் பொருளியல் சிந்தனையும் தொழில்முனைவுத் திறனும்
- அயலகத் தமிழரது பொருண்மியப் பங்களிப்பும் உலகமயமாதலும்
- விளிம்புநிலை மக்களது வாழ்வியலும் இயற்கைசார் பொருண்மியமும்
- ஈழத் தமிழரது வாழ்வியலும் மறுவாழ்வும்
4. தமிழர் வரலாறும் வாழ்வியலும்
- தமிழர் வரலாற்றுத் தொன்மையும் நாகரிக வளர்ச்சியும்
- தமிழர் கல்வி மற்றும் மருத்துவ அறிவியல் மரபுகள்
- மொழி வழி அரசியலும் தமிழர் அடையாளம் பேணலும்
- தமிழர் புலப்பெயர்வும் உலகத் தமிழர் வாழ்வியலும்
5. வட - கிழக்குப் பொருண்மிய மேம்பாடு
- வட-கிழக்கில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு
- வட-கிழக்கில் வேளாண்மை, மீன்பிடி, நீர் வளம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு
- வட-கிழக்கு மனித வள மேம்பாட்டில் இன்றைய சிக்கல்கள்
- வட-கிழக்கு மேம்பாட்டில் உலகத் தமிழரது பங்களிப்பு
ஆய்வரங்கக் குழு
தலைவர்
01. பேராசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன்
(மெய்ப் பொருளியல் மற்றும் சைவசித்தாந்தத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்)
துணைத்தலைவர்கள்
02. பேராசிரியர் முனைவர் ஜோசப் சந்திரகாந்தன்
(மேனாள் பேராசிரியர், தொரண்டோப் பல்கலைக்கழகம்)
03. பேராசிரியர் முனைவர் இ.அ. செல்வநாதன்
(பேராசிரியர், அளவைப் பொருளியற் துறை, கிரிபித் பல்கலைக்கழகம், அவுத்ரேலியா)
உறுப்பினர்கள்
04. பேராசிரியர் முனைவர் பெ. காளிராசன்
(மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்)
05. பேராசிரியர் முனைவர் மு. இராமசுவாமி
(மேனாள் நாடகத்துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
06. திரு. அரு. சௌரிராஜன்
(அறங்காவலர் குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சிக் கழகம்)
07. பேராசிரியர் முனைவர் இரா. சீனுவாசன்
(மேனாள் பொருளியற் துறைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்)
08. பேராசிரியர் முனைவர் ம. விஜயபாஸ்கர்
(மேனாள் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்)
09. பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்
(மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்)
10. பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாசு
(மேனாள் தமிழ்த் துறைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
11. பேராசிரியர் முனைவர் கி. விசாகரூபன்
(மூத்த தமிழ்த் துறைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
12. பேராசிரியர் முனைவர் போல் ரொகான்
(கிறித்தவ நாகரிகத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
13. பேராசிரியர் முனைவர் நா. சுப்பிரமணியன்
(மேனாள் தமிழ்த் துறைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
14. பேராசிரியர் முனைவர் சி. சந்திரசேகரம்
(பேராசிரியர், தமிழ்க் கற்கைகள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்)
15. திருமதி விஜிதா திவாகரன்
(தமிழ்க் கற்கைகள் துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைக்கழகம்)
16. பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி
(மேனாள் தமிழ்த் துறைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
இணைப்பாளர்: அபினா நிமல்ராஜ்