speaker-photo

Dr. A. Shanmugadas

Committee Members
EMERITUS PROFESSOR DR. ARUNASALAM SANMUGADAS Born on 2nd January 1940 in Trincomalee, Sri Lanka. Graduated from University of Ceylon in 1963 and obtained his Doctorate in Linguistics from University of Edinburgh, Scotland, supervised by Professor R.E. Asher in 1972. Had been teaching in Sri Lankan Universities for more than 40 years. At present he is affliated with University of Jaffna as an Emeritus Professor in Tamil. Had been a visiting Professor at Gakushuin University in Japan and University of Ibadan in Nigeria. Has published more than 40 books. With Mr. Wimal Saminathan and Dr. S. Manonmani I have translated Kuruntokai into Sinhala language in The Central Institurte of Classical Tamil. I was awarded Senior Research Fellowship by The Japan Foundation in 1983. Government of Sri Lanka awarded ‘Sahitya Ratna’ in 2008 for my services for literary studies. Attended and presented papers at the World Tamil Teachers Conferences held in Singapore, Malaysia, Madras, Mauritius and South Africa. For advising and organizing “The Great Festival of Thirukkural” in Sri Lanka in 2019, the “President’s Award” was awarded to me. World Tamil Sangam Madurai awarded me its ‘Prize for Tamil Grammar’ in the year 2020. I was appointed as the Director of The Media Resources and Training Centre established in University of Jaffna with the financial assistance from Denmark and Norway from 2005. UNESCO awarded me a Scholarship to visit Departments of Media Studies in New Delhi, Bharathyar, Manonmaniyam Sundaranar and Chennai Universities in India and the Media College in Argos in Denmark. I was the first President of Jaffna Tamil Sangam and now as Senior President. From 2019, I am functioning as the one of the General Secretaries of International Association For Tamil Research. தகைசால் பேராசிரியர் முனைவர் அருணாசலம் சண்முகதாஸ் இலங்கையில் திருகோணமலையில் 02.01.1940இல் பிறந்தவர். 1963இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஸ்கொட்லாந்து எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் 1972இல் பெற்றவர். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் துணைக்குழுக்களில் அங்கம் வகித்தவர். தற்போது தகைசால் தமிழ்ப் பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்துள்ளார். இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிபுணத்துவ மதியுரைப் பேராசிரியராக 2009இல் இருந்துள்ளார். ஜப்பான் கக்சுயின் பல்கலைக்கழகத்திலும், நைஜீரியா இபாதன் பல்கலைக்கழகத்திலும் மொழியியல் கற்பிப்பதற்கு விருந்துநிலைப் பேராசிரியராக இருந்தார். 2005 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் டென்மார்க், நோர்வே நாடுகளும் இணைந்து நடத்திய ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். யுனெஸ்கோ வழங்கிய புலமைப் பரிசிலில் இந்தியாவில் புதுடெல்லி, பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், சென்னைப் பல்கலைக்கழகங்களின் ஊடகத் துறைகளுக்கும் டென்மார்க் ஆர்கோஸ் ஊடகக் கல்லூரிக்கும் சென்று வந்தார். 40க்கு மேற்பட்ட நூல்களையும் 200க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியமாகிய குறுந்தொகையினை சென்னை செம்மொழி மையத்தின் பணிப்பில் முனைவர் ச. மனோன்மணி, திரு. விமல் சாமிநாதன் ஆகியோருடன் சேர்ந்து சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இலங்கை அரசு இவருக்கு “சாகித்திய ரத்னா” விருதினை 2008இல் வழங்கியது. திருக்குறள் பெரு விழாவைச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க மதியுரை வழங்கியமைக்காக “அதிமேதகு ஜனாதிபதி விருது” 30.08.2019இல் வழங்கப்பட்டது. 1920இல் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இவருக்கு “தமிழ் இலக்கண விருது” வழங்கிச் சிறப்பித்தது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றித் தற்போது அதன் பெருந்தலைவராகவுள்ளார். 2019 தொடக்கம் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர்களுள் ஒருவராகப் பணிசெய்துவருகிறார்.